/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகனத்தில் பணம் திருடிய சிறுவன் கைது
/
வாகனத்தில் பணம் திருடிய சிறுவன் கைது
ADDED : அக் 13, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம்,:ஒட்டியம்பாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் அந்தேணிராஜ், 31. பழக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை, இவரது 'டாடா ஏஸ்' வாகனத்தை, கடை அருகில் நிறுத்தினார்.
சிறிது நேரத்திற்கு பின் சென்று பார்த்தபோது, வாகனத்தில் இருந்த பெட்டியின் பூட்டை உடைத்து, 1.50 லட்சம் ரூபாய் திருடியது தெரிந்தது. பெரும்பாக்கம் போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், 14 வயதுக்கு உட்பட்ட, மூன்று சிறுவர்கள் திருடியது தெரிந்தது. ஒருவன் சிக்கினான்; இரண்டு பேரை தேடுகின்றனர்.