/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
/
மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ADDED : மே 09, 2025 12:41 AM
ராமாபுரம், கோடம்பாக்கத்தை சேர்ந்த நிர்மல் என்பவரின் மகன் கைலாஷ், 10. இவர், பள்ளி விடுமுறையையொட்டி, ராமாபுரம், அன்னை சத்யா நகர் பிரதான சாலையில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு, அத்தையுடன் மொட்டை மாடியில் துணி காயப்போடுவதற்காக சென்றார்.
அப்போது, கையில் இரும்பு கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது, இரும்பு கம்பி உரசியது.
இதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து, சிறுவன் மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிறுவனை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.