/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மர்ம மரணம்
/
தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மர்ம மரணம்
ADDED : செப் 23, 2025 01:26 AM
டி.பி., சத்திரம்:கழிப்பறையில் வழுக்கி விழுந்த நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சென்னை, டி.பி.சத்திரம் பகுதியில் பாட்டி வீட்டில் தங்கியிருந்தவர் சாய்சரண், 4. இருதினங்களுக்கு முன், சாய்சரண் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
தலையின் பலத்த காயமடைந்த சிறுவனை, அங்கிருந்தோர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை சிறுவன் சாய்சரண் உயிரிழந்தார்.
டி.பி.சத்திரம் போலீசார் முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் தந்தை பழைய குற்றவாளி சதீஷ்குமார், 2020ல் அம்பத்துாரில் ரவுடி போண்டா பாலாஜியை கொலை செய்த வழக்கில், புழல் சிறையில் உள்ளார்.
கொலைக்கு பழித்தீர்க்க, 2023ல் சதீஷ்குமாரின் மனைவி நந்தினி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், தாய், தந்தையின்றி பாட்டில் வீட்டில் தங்கியிருந்த சிறுவன் உயிரிழந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.