ADDED : ஜன 08, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் சபாபதி. லாரியில் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் ஹரிஹரன், 16. தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, தண்ணீர் கொண்டு சென்ற லாரியில், ஹரிஹரனும் சென்றார்.
நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் உள்ள, 'எலகன்ட் பினாக்கர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.
ஹரிஹரன், தண்ணீரின் அளவை பார்க்க, லாரியில் ஏறி மூடியை திறந்தார். அப்போது, சாலையோரம் சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசி ஹரிஹரன் பலியானார்.
செம்மஞ்சேரி போலீசார், குடியிருப்பு மேலாளர் அனந்தகிருஷ்ணனிடம் விசாரிக்கின்றனர்.