தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி


ADDED : ஏப் 08, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியந்தோப்பு, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ரேவதி, 34. இவரது கணவர் தங்கராஜ். இவர்களுக்கு, சூர்யா, 11, என்ற மகன் இருந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன், கணவரிடம் சண்டை போட்ட ரேவதி, ஓட்டேரி, பட்டாளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மகனுடன் வந்து தங்கியுள்ளார்.

நேற்று மாலை 5:00 மணிக்கு, ரேவதியும் அவரது மகன் சூர்யாவும், வீட்டில் பாயில் துாங்கியுள்ளனர். பாய் அருகே இருந்த 'டேபிள் பேன்' சுவிட்ச் பகுதியில், 'சேப்டி பின்'னால் சூர்யா விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில், சூர்யா மயக்கமானார். உடனே, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சூர்யா உயிரிழந்தது தெரியவந்தது.

மருத்துவமனை அளித்த தகவலின்பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us