/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாந்தி, பேதி பாதிப்பு சிறுவன் உயிரிழப்பு
/
வாந்தி, பேதி பாதிப்பு சிறுவன் உயிரிழப்பு
ADDED : டிச 09, 2024 03:08 AM
துரைப்பாக்கம்:அருணாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவானி, 30; துரைப்பாக்கம், அண்ணா தெருவில் தங்கி, அங்குள்ள ஒரு ஷோரூமில் காவலாளியாக பணிபுரிகிறார்.
இவரது உறவினர் பீம் பரதன், 16, நான்கு நாட்களுக்கு முன், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து, பவானியை பார்க்க வந்தார்.
இங்குள்ள, குடிநீர், உணவில் ஒவ்வாமை ஏற்பட்டதால், பீம் பரதனுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறிய மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை அடுத்து, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, நேற்று அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சில நிமிடத்திலேயே இறந்தார். துரைப்பாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.