/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
/
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
ADDED : ஜன 22, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டூர்புரம்:கோட்டூர்புரம், சின்ன மலை, எல்.டி.ஜி., சாலை பகுதியைச் சேர்ந்தவர் லுார்துராஜ். இவரது மகன் ஆரூண் ராஜ், 7; இரண்டாம் வகுப்பு மாணவர்.
எல்.டி.ஜி., சாலையில் நண்பர்களுடன் ஆரூண் ராஜ் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, அருகில் பூட்டப்பட்டிருந்த வீட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பந்து விழுந்தது. அதை எடுக்க, ஆரூண் ராஜ் சென்றார்.
அப்போது நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். அங்கிருந்தோர் சிறுவனை காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.