/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா வாங்க திருட்டில் ஈடுபட்ட சிறுவன்
/
கஞ்சா வாங்க திருட்டில் ஈடுபட்ட சிறுவன்
ADDED : பிப் 04, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனி, 4வது தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், 21. இவர், கடந்த 31ம் தேதி மாலை, குடும்பத்துடன் மேல்மலையனுார் கோவிலுக்கு சென்றார்.
பிப்., 1ம் தேதி இரவு 10:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 48,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பூர், மங்களாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிக்கினான். விசாரணையில், கஞ்சா வாங்குவதற்காக திருட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. போலீசார் சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.