/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுவன் கொலை சோழவரத்தில் கொடூரம்

ADDED : அக் 28, 2025 01:10 AM

சோழவரம்: சோழவரத்தில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வீட்டிற்குள் மர்மமான முறையில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவரம் அடுத்த அலமாதி, தீரன் சின்னமலை தெருவைச் சேர்ந்தவர் பாபு, 17; வெல்டிங் தொழிலாளி. இவரது பெற்றோர் மற்றும் சகோதரர், கடந்த வாரம் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு முதல் பாபுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பாபுவின் சகோதரர், நேற்று மதியம் நண்பர் ஒருவரை அனுப்பி பார்த்து வரும்படி தெரிவித்துள்ளார்.
அவர் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் மொபைல் போன் அழைப்பு சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பாபு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பாபுவின் மொபைல் போனை ஆய்வு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.