ADDED : ஆக 27, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
பெரம்பூர்: சலுான் கடையில் பணிபுரிந்த, 12 வயது வடமாநில சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
சென்னை குழந்தைகள் உதவி மைய கண்காணிப்பாளர் மோகன் மற்றும் அவரது குழுவினர், பெரம்பூர் நெல் வயல் சாலையில், நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சலுான் கடையில் 12 வயது நிரம்பாத உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை, வேலையில் அமர்த்தியது தெரிய வந்தது. அந்த சிறுவன், கடந்த இரண்டு மாதங்களாக அந்த சலுானில் முடி திருத்தும் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் உதவி மைய நபர்கள் சிறுவனை மீட்டு, ராயபுரம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். கடையின் உரிமையாளரான குமரன் என்பவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
