UPDATED : செப் 05, 2026 09:10 PM
ADDED : செப் 05, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
பூக்கடை:அரசு மாநகரப் பேருந்தில் எஸ்.பி.ஐ.,வங்கி ஊழியரின் மொபைல் போனை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 27. அவர் நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ.,வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்ததில் வழித்தடம் எண், 17 கே பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்காக மொபைல் போனை பார்த்தார்.
போன் திருடு போனது தெரிந்தது. புகார்படி பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், பூக்கடையைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் போனை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
