ADDED : மே 27, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுவனை, 24ம் தேதி, 9 பேர் வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், இன்ஸ்டாகிராமில் கிண்டலாக பதிவிட்ட பிரச்னையில் தாக்கியது தெரிந்தது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த மனோஜ், 21, மற்றும் 8 சிறுவர்கள் மீது, வழக்கு பதிவு செய்தனர்.
மனோஜ், ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 14, 16 வயதுள்ள இரண்டு சிறுவர்களை, நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.