/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து திருடிய சிறுவர்கள் கைது
/
வீடு புகுந்து திருடிய சிறுவர்கள் கைது
ADDED : நவ 02, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: வீடு புகுந்து திருடிய சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ரோந்து போலீசாரிடம் சிக்கினர்.
மேற்கு அண்ணா நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கையில் இரும்பு குழாயுடன் சாலையில் நடந்து வந்த நான்கு பேரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதில், மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் பாடியைச் சேர்ந்த ஆகாஷ், 19, பாண்டுரங்கதுரை, 19, ஆகியோர் என்பது தெரிந்தது.
நான்கு பேரும், 3வது அவென்யூவில் உள்ள வீட்டில் புகுந்து இரும்பு குழாய்களை திருடிவிட்டு, மற்ற வீடுகளை நோட்டமிட்டு வரும் போது சிக்கியது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

