ADDED : டிச 21, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், மேற்கு சிவன் கோவில் தெருைவச் சேர்ந்தவர் கார்த்திக், 26; தனியார் நிறுவன ஊழியர். இவரது 'யமஹா ஆர்15' பைக், கடந்த 9ம் தேதி மாயமானது. வில்லிவாக்கம் போலீசாரின் விசாரணையில், சிறுவர்கள் வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 17 மற்றும் 15 வயது சிறுவர்களை பிடித்து விசாரித்தபோது, திருடிய பைக்கை மற்றொரு நபரிடம் கொடுத்தது தெரிந்தது.
இதையடுத்து, சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது.