/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போன் சர்வீஸ் கடையில் திருடிய சிறுவர்கள் கைது
/
போன் சர்வீஸ் கடையில் திருடிய சிறுவர்கள் கைது
ADDED : அக் 04, 2025 02:03 AM
மதுரவாயல்,மொபைல் போன் சர்வீஸ் கடையின் பூட்டை உடைத்து, 44,000 ரூபாய் திருடிய இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமாபுரம், ராயலா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், 38. இவர், போரூர் அடுத்த ஆலப்பாக்கம், காமாட்சி அம்மன் நகரில், மொபைல் போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 17ம் தேதி, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலை பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 44,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
மதுரவாயல் போலீசார் விசாரித்து, 17 மற்றும் 15 வயதுள்ள இரு சிறுவர்களை, நேற்று கைது செய்தனர். 17 வயது சிறுவன் மீது, ஏற்கனவே எட்டு குற்ற வழக்குகள் இருப்பது, விசாரணையில் தெரிந்தது. விசாரணைக்கு பின், இருவரையும் நேற்று சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.