UPDATED : செப் 24, 2026 10:17 PM
ADDED : செப் 24, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுாரில் குப்பைத்தொட்டியில் தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த குழந்தை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சோழிங்கநல்லுார், சத்தியவாணி முத்து தெருவில் உள்ள குப்பை தொட்டியை ஒட்டி கிடந்த குப்பையில், நேற்று தொப்புள் கொடியுடன் ஒரு ஆண் குழந்தையின் உடல் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து குழந்தை உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தையை உயிரோடு போட்டார்களா, இறந்தபின் கொண்டு போட்டார்களா, குழந்தையின் தாய் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
