ADDED : மே 25, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில், மேகநாதன், புவனேஸ்வரி ஆகிய இருவரும் ஊர்க்காவல் படை வீரர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மெரினாவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 12 வயது சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் இன்றி கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ஊர்க்காவல் படையினர், சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். இதில், இருவரும் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. பின் இரண்டு சிறுவர்களின் பெற்றோரை அழைத்து, அவர்களிடம் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.