/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர் மாநில செஸ் 430 வீரர்கள் பங்கேற்பு
/
சிறுவர் மாநில செஸ் 430 வீரர்கள் பங்கேற்பு
ADDED : நவ 04, 2024 04:26 AM

சென்னை:தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு ஆதரவுடன், ஆனந்தன் செஸ் அகாடமி சார்பில், 3ம் ஆண்டு, சிறுவர் - சிறுமியருக்கான மாநில செஸ் போட்டி, தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
போட்டிகள், 'ஸ்விஸ்' முறையில் 'பிடே' விதிப்படி 7, 10, 13 மற்றும் 25 வயது பிரிவின் கீழ் நடந்தன.
காலை 9:00 மணிக்கு துவங்கிய இப்போட்டியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து, இருபாலரிலும் 430 வீரர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுற்று போட்டிக்கும் தலா 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு, பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. தவிர, போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.