/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியாகும் ஆசையில் அராஜகம் டூ - வீலர்களை எரித்த சிறுவர்கள்
/
ரவுடியாகும் ஆசையில் அராஜகம் டூ - வீலர்களை எரித்த சிறுவர்கள்
ரவுடியாகும் ஆசையில் அராஜகம் டூ - வீலர்களை எரித்த சிறுவர்கள்
ரவுடியாகும் ஆசையில் அராஜகம் டூ - வீலர்களை எரித்த சிறுவர்கள்
ADDED : ஜன 07, 2025 12:24 AM
அயனாவரம், அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 24; பிளம்பர். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கொழுந்து விட்டெரிந்தது. சற்று நேரத்தில் மளமளவென, அருகே நிறுத்தப்பட்டிருந்த மணிமாறன், 35, மற்றும் டேவிட் சாந்தகுமார், 29, ஆகியோரது இருசக்கர வாகனங்களிலும் தீ பரவியது.
மேலும், அதே குடியிருப்பில் தங்கியுள்ள பழைய குற்றவாளியான ஹரிஷ்குமார், 30, என்பவரது வீட்டின் முன்பக்க கதவிற்கும் தீ வைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, அயனாவரம் போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் மூன்று பேர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்தாண்டு நவம்பர் மாதம், இச்சிறுவர்கள் அதே பகுதியில் ஆட்டோ ஒன்றை எரித்தனர். அவ்வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறுவர்கள் என்பதால் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், 'நீங்கள் ரவுடிகள் ஆக பார்க்கிறீர்களா?' எனக் கேட்டு, மூவரையும் சிலம்பரசன் அதட்டியுள்ளார். இதனால், அவரது பைக்கிற்கு தீ வைத்தும் தெரியவந்தது.
மேலும், பழைய குற்றவாளி ஹரிஷ் குமாரிடம் உள்ள முன்விரோதம் காரணமாக அவரது வீட்டின் கதவை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று சிறுவர்களை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.