/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காஸ்' குழாய் பதிக்க குடிநீர் குழாயில் உடைப்பு
/
'காஸ்' குழாய் பதிக்க குடிநீர் குழாயில் உடைப்பு
ADDED : ஏப் 17, 2025 12:17 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் இருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.
வாரியத்தின் குழாய், வண்டலுார் - வாலாஜாபாத், தாம்பரம் - முடிச்சூர், தாம்பரம் காந்தி சாலை வழியாக செல்கிறது. இதில், காந்தி சாலையில் இருந்து, ஒரு பகுதி குழாய் கடப்பேரி வழியாக திருநீர்மலைக்கு செல்கிறது.
இந்த நிலையில், காந்தி சாலையில் சமையல் காஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின்போது, திருநீர்மலைக்கு செல்லும் பாலாறு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறியது.
இதுகுறித்து அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.