பெண்ணிடம் அத்துமீறியவரை தட்டிக்கேட்ட கொத்தனார் கொலை
பெண்ணிடம் அத்துமீறியவரை தட்டிக்கேட்ட கொத்தனார் கொலை
ADDED : ஜூன் 12, 2026 03:19 AM
ஐஸ்ஹவுஸ்: பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட கொத்தனார் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவன், 45; கொத்தனார். இவர், திருவல்லிக்கேணி பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பார்த்தசாரதி கோவில் அருகே நடந்து சென்றபோது, நடைபாதையில் படுத்திருந்த பெண்ணிடம் மர்ம நபர் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதை பார்த்த தேவன் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நபர் கொத்தனாரை கையால் தாக்கியதுடன், கீழே கிடந்த கல்லை தலையில் போட்டுள்ளார். அவ்வழியாக சென்றவர்கள், ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் தேவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரிய வந்தது.
கொலையாளியை பிடித்து விசாரித்ததில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெயின்டர் ரபிக், 40, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
