/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ரூ.800 கோடியில் வீடுகள் கட்ட 'பிரிகேட்' ஒப்பந்தம்
/
சென்னையில் ரூ.800 கோடியில் வீடுகள் கட்ட 'பிரிகேட்' ஒப்பந்தம்
சென்னையில் ரூ.800 கோடியில் வீடுகள் கட்ட 'பிரிகேட்' ஒப்பந்தம்
சென்னையில் ரூ.800 கோடியில் வீடுகள் கட்ட 'பிரிகேட்' ஒப்பந்தம்
ADDED : நவ 09, 2024 12:48 AM
சென்னை, சென்னையில் 10 லட்சம் சதுர அடி பரப்பில், 800 கோடி ரூபாய் மதிப்பில், வீடுகளைக் கட்டும் ஒப்பந்தத்தில், முன்னணி கட்டுமான நிறுவனமான பிரிகேட் குழுமம் கையெழுத்திட்டுள்ளது.
சென்னை, கொச்சி, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் ஆகிய தென்னிந்திய பெருநகரங்களில் குடியிருப்பு, அலுவலகம், விருந்தோம்பல் விடுதி, கல்வி ஆகிய பிரிவுகளில் கட்டடங்களை கட்டும் பணியில் பிரிகேட் குழுமம் ஈடுபட்டு வருகிறது.
தற்போது சென்னையின் மேற்கு பகுதியில் புதிய குடியிருப்பு கட்டுமானம் அமைய உள்ள நிலையில், குறிப்பாக எந்த இடம் என்பது குறித்து பிரிகேட் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து, பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வகையிலான, மிகப்பெரிய குடியிருப்பு கட்டுமான திட்டத்தில் இணைந்துள்ளோம். உலகத் தரம் வாய்ந்த குடியிருப்பு, வர்த்தக மற்றும் வணிக கட்டடங்கள், விருந்தோம்பல் விடுதிகளை கட்டுவதில் நிறுவனத்தின் இலக்கை இது உறுதி செய்கிறது.
சென்னையின் மேற்கு பகுதியில் கட்டப்பட உள்ள குடியிருப்பு, எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் இருக்கும். தரம் மற்றும் புதுமைப் படைப்பை உறுதிப்படுத்தும் வகையில் கட்டுமானம் அமையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.