/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கமிஷனர் துவக்கிய கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு
/
கமிஷனர் துவக்கிய கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு
ADDED : பிப் 23, 2024 12:27 AM

சென்னை, நிர்பயா நிதி உதவியுடன், காவல் சிறார் மன்றங்களில், 'ஸ்மார்ட் டிவி' வாயிலாக கல்வி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று துவக்கி வைத்தார்.
நிர்பயா நிதி உதவியின் கீழ் பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை காவல் துறை, 'திறன் மேம்பாட்டு' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறுகையில், 'சென்னையில் உள்ள, 112 காவல் சிறார் மன்றங்களிலும், 'ஸ்மார்ட் டிவி' நிறுவப்பட்டு, இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிவை வளப்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும் இத்தளம் உறுதி செய்கிறது' என்றார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் கபில்குமார் சரட்கர், செந்தில் குமாரி, இணை கமிஷனர்கள் விஜயகுமார், கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.