/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய்கள் உடைந்து சேதம் சாலையில் தேங்கிய கழிவுநீர்
/
குழாய்கள் உடைந்து சேதம் சாலையில் தேங்கிய கழிவுநீர்
குழாய்கள் உடைந்து சேதம் சாலையில் தேங்கிய கழிவுநீர்
குழாய்கள் உடைந்து சேதம் சாலையில் தேங்கிய கழிவுநீர்
ADDED : டிச 24, 2024 01:00 AM

சின்ன போரூர், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, சின்ன போரூரில் அண்ணா சாலை உள்ளது. இது, நெசப்பாக்கம், ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை.
மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி, அண்ணா சாலை மற்றும் மருத்துவமனை சாலை சந்திப்பில், 8 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து சாலை உள்வாங்கியதால், பள்ளம் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து, குடிநீர் வாரிய ஊழியர்கள், குடிநீர் குழாயை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதே இடத்தில், கழிவுநீர் குழாயும் உடைந்ததால், அதையும் சீர் செய்யும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அண்ணா சாலையில் உள்ள பாதாள சாக்கடை, தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
இதனால், அண்ணா சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து, சாலையில் குளம் போல் தேங்குகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வியாபாரிகள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.