/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்த கழிவுநீர் கால்வாய் சாலையில் 'மெகா' பள்ளம்
/
உடைந்த கழிவுநீர் கால்வாய் சாலையில் 'மெகா' பள்ளம்
ADDED : ஜன 31, 2025 11:49 PM

கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலை - கோபாலமேனன் தெரு சந்திப்பில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நேற்று காலை, 5 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்தனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்டதன் காரணத்தை மட்டும் அறிந்து கொண்டு, இரவு நேரத்தில் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என, புறப்பட்டுச் சென்றனர்.
தற்போது, ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணி நடப்பதால், வடபழனி செல்லும் அனைத்து வாகனங்களும், இச்சாலை வழியாக தான் செல்கின்றன. இச்சாலையில் பள்ளம் ஏற்பட்டதால், அவ்வழியாக வாகனங்கள் நேற்று ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.