/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தம்பி சமாதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் கைது
/
தம்பி சமாதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் கைது
தம்பி சமாதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் கைது
தம்பி சமாதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் கைது
ADDED : ஜன 06, 2026 06:11 AM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, விபத்தில் உயிரிழந்த தம்பி பிறந்த நாளில், பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் உட்பட மூன்று பேரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே, சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை, அடிதடி உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது தம்பி ராஜ்குமார், நான்கு ஆண்டுகளுக்கு முன், வாகன விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் ராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி, அவரது சமாதிக்கு சென்று, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள், பட்டா கத்தியை வைத்து, சமாதியின் மீது கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, பட்டா கத்தியால் கேக் வெட்டிய அய்யப்பன், 38, நரேஷ், 24, நவீன்குமார், 23, ஆகிய மூன்று பேரை, சுங்குவார்சத்திரம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

