தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளம் தோண்டும்போது மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 'சீரியஸ்'

 பள்ளம் தோண்டும்போது மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 'சீரியஸ்'

 பள்ளம் தோண்டும்போது மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 'சீரியஸ்'


ADDED : பிப் 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆலந்துார்: சாலையில் பள்ளம் தோண்டும்போது, மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வீரேஷ், 22, ஸ்ரீபால், 26. இருவரும், எல் அண்டு டி., நிறுவன ஒப்பந்த ஊழியர்கள்.

சென்னை இன்டலிஜென்ட் டிரான்போர்ட் சிஸ்டம் எனும் சி.ஐ.டி.எஸ்., சிக்னல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலந்துார், மவுன்ட் மினார் ஹோட்டல் அருகில் சிக்னல் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் வீரேஷ் ஈடுபட்டபோது, புதை மின் வடத்தில் கடப்பாரை உரசியுள்ளது. அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, அவரின் உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது.

அவரை காப்பாற்ற முயன்ற ஸ்ரீபாலுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து மவுன்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us