ADDED : நவ 05, 2026 04:27 PM
அ நிறம் | அளவு
பூக்கடை: பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்கள் சார்பில், பூக்கடை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, மூன்றாவது ஊதிய மாற்றத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோஷமிட்டனர்.
