/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., இணைப்பு சாலைக்காக பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ADDED : ஜன 29, 2026 05:46 AM

சென்னை: ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., இடையே ஆறு வழி இணைப்பு சாலைக்காக, பகிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டப்பட உள்ளதால், அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., இடையே, 1.45 கி.மீ.,க்கு ஆறு வழி இணைப்பு சாலை அமைக்க, 303 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதில், 680 மீட்டர் துாரத்தில் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து, பகிங்ஹாம் கால்வாயில் துருப்பிடிக்காத இரும்பு பாலம் கட்டி, இணைக்க வேண்டி உள்ளது. இதற்காக, கால்வாய் கரையில் உள்ள, 53 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டி இருந்தது. முதற்கட்டமாக, 47 வீடுகளை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. அங்கு வசித்தவர்கள், பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்யப்படுகின்றனர்.