/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது ஆகாய தாமரை சகதியில் சிக்கி எருமை மாடு பலி
/
பொது ஆகாய தாமரை சகதியில் சிக்கி எருமை மாடு பலி
ADDED : ஏப் 17, 2025 11:50 PM

கோவிலம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கோவிலம்பாக்கம் ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன்,180 ஏக்கர் பரப்பளவுடன் காணப்பட்டது. பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பால், 30 ஆண்டுகளில் கோவிலம்பாக்கம் ஏரி 70 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கியது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் விளைவாக, கோவிலம்பாக்கம் ஏரி குப்பை கொட்டும் இடமாகவும், மாட்டு தொழுவமாகவும் மாறி, கழிவுநீர் கலக்கும் இடமாக உருவெடுத்துள்ளது. இப்பகுதியில் சகதி நிறைந்து, ஆகய தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
இந்த ஏரியை, சமூக ஆர்வலர்கள் கூட சுத்தப்படுத்த முன்வரவில்லை. சுத்தப்படுத்த இறங்கினால், உயிர் பலி நிச்சயம் என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இந்நிலையில், நேற்று மேய்ச்சலுக்கு வந்த எருமை மாடு ஒன்று, இப்பகுதியில் இறங்கி சகதியில் சிக்கி இறந்தது.
இந்த ஏரியை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
***

