ADDED : ஆக 13, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்: சேலையூர் அடுத்த ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சரளா, 47; பால் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, தன் இரண்டு எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், உறவினர்களுடன் சென்று, இரவு முழுதும் தேடினார்.
இந்த நிலையில், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள காலி இடத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், இரண்டு எருமைகளும் உயிரிழந்தது, நேற்று காலை தெரிய வந்தது. சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.