ADDED : மார் 05, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கனிம பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, அகில இந்திய கட்டுனர் மற்றும் வல்லுனர் சங்கத்தின், தமிழ்நாடு புதுச்சேரி அமைப்பினர், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சங்கத்தின் பூந்தமல்லி அமைப்பினர் நேற்று, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், தங்களது கோரிக்கையை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் மனுவாக அளித்தனர்.
இதுகுறித்து, சங்கத்தினர் கூறியதாவது:
ஜல்லி, மணல் போன்ற கட்டுமான கனிம பொருட்களின் விலை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அனைத்து அரசு துறைகளிலும் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் அவதிப்படுகின்றனர். அரசு உடனடியாக பரிசீலித்து, சந்தை விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

