/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2000 - 500 நோட்டு கட்டுகள் வேளச்சேரியில் சலசலப்பு
/
ரூ.2000 - 500 நோட்டு கட்டுகள் வேளச்சேரியில் சலசலப்பு
ரூ.2000 - 500 நோட்டு கட்டுகள் வேளச்சேரியில் சலசலப்பு
ரூ.2000 - 500 நோட்டு கட்டுகள் வேளச்சேரியில் சலசலப்பு
ADDED : ஜன 22, 2026 06:03 AM

வேளச்சேரி: வேளச்சேரியில் இரு பைகளில் கிடந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளால் சலசலப்பு ஏற்பட்டது. விசாரணையில், சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தும் 'டம்மி' ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
வேளச்சேரி, நேரு நகர், அண்ணா தெருவில் குப்பை குவியலில் இரண்டு பை கிடந்தது. அதில், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தன. இதை பார்த்த துாய்மை பணியாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்தனர். இதில், ரூபாய் நோட்டு கட்டுகள், சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் 'டம்மி' பேப்பர் நோட்டு என தெரிந்தது. அவற்றை குப்பை தொட்டியிலோ, பொது இடங்களிலோ கொட்டக் கூடாது.
அவற்றை முறையாக கையாள, திரைப்படத்துறைக்கு அரசு அறிவுரையும் வழங்கி உள்ளது. அதையும்மீறி 'டம்மி' நோட்டுகளை போது இடங்களில் கொட்டி உள்ளனர்.
அவற்றை குப்பையில் கொட்டிய நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

