ADDED : மார் 10, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
கோயம்பேடு: கோயம்பேடு பகுதியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிபவர் சதீஷ், 36. இவர், 6ம் தேதி மதியம் கோயம்பேடு, ஜெய்நகர் பூங்காவில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று பேர் சதீஷை மிரட்டி, மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் பறித்து தப்பிச் சென்றனர்.
விசாரித்த கோயம்பேடு போலீசார், கொளத்துார், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 33, என்பவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
