ADDED : ஏப் 06, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணியில், வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர், 28. இவர், காசிமேடு பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவர், 4ம் தேதி மாலை திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் வழிமறித்து, பணம் கேட்டுள்ளார். அதற்கு அப்துல் காதர், தன்னிடம் பணம் ஏதும் இல்லை என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், அப்துல் காதரை கையால் சரிமாரியாக தாக்கி 850 ரூபாய் பறித்துச் சென்றார்.
இதில் காயமடைந்த அப்துல் காதர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட எல்லீஸ்புரத்தைச் சேர்ந்த சபரி, 23 என்பவரை கைது செய்தனர்.
