ADDED : பிப் 18, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, சோமசுந்தரம் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் மேற்பார்வையாளராக இருப்பவர் பரதன், 53. இடையில் நிறுத்தப்பட்ட பணி, மீண்டும் துவங்கியது. அங்கு சென்ற போது, இரும்பு கதவு மற்றும் கட்டுமான பொருட்கள் மாயமாகி இருந்தன.
அருகில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது, கடந்த 5ம் தேதி மர்மநபர் ஒருவர், பொருட்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது.
இது குறித்து, நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீசில் பரதன் புகார் அளித்துள்ளார். காணாமல் போன பொருட்களின் மதிப்பு, 50,000 ரூபாய்.