ADDED : நவ 18, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரம், எம்.ஆர்.எம்., சாலையில் மின்மாற்றி உள்ளது. அங்கிருந்து மேற்கு தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு, அதிலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு, அதிக மின் அழுத்தம் காரணமாக, இந்த மின்மாற்றி தீப்பற்றி எரிய துவங்கியது. சற்று நேரத்தில் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

