/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயப்பேட்டை மேம்பால துாண்களில் கருகும் செடிகள்
/
ராயப்பேட்டை மேம்பால துாண்களில் கருகும் செடிகள்
ADDED : பிப் 17, 2024 12:32 AM

ராயப்பேட்டை, மேம்பால துாண்களில் அழகுக்காக வைக்கப்பட்ட சிறிய வகை செடிகள், பராமரிப்பு மற்றும் தண்ணீர் இல்லாமல் கருகிய நிலையில் உள்ளன.
சென்னையில் பல்வேறு இடங்களில், மாநகராட்சி சார்பில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலை மைய தடுப்பிலும் செடிகள் வைத்து, சென்னையை அழகுபடுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், சென்னையில் உள்ள மேம்பால துாண்களைச் சுற்றி, சிறிய வகை செடிகள் வைத்துள்ளனர்.
இது, மேம்பாலத்தின் அழகைக் கூட்டுவதாக உள்ளது.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, அந்த இடத்தில், 'மோட்டார் பம்ப்' அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில், முறையாக தண்ணீர் விட்டு செடிகளை பராமரிக்காததால், அவை காய்ந்துள்ளன.
அந்த வகையில், ராயப்பேட்டை மேம்பால துாண்களைச் சுற்றி வைக்கப்பட்ட செடிகள் தண்ணீர் இல்லாமல், வெயிலில் கருகிய நிலையில் உள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மண்டல வாரியாக, சென்னையை அழகுபடுத்த ஆங்காங்கே செடிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி அதன் பசுமை மாறாமல் பராமரிக்கின்றனர். சில மேம்பால துாண்களில் அதிக வெப்பம் காரணமாக, இயற்கையாக செடிகள் வாடிவிடுகின்றன. இதனால் மேம்பால துாண்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.