ADDED : மே 06, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனம்பாக்கம்,
மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலை, சிக்னலில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, தடம் எண்: 70வி மாநகர பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
பீதியில் பயணியர் கூச்சலிட்டனர். இந்த விபத்தால், மீனம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீர்செய்ததோடு, பயணியரை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
***