தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவியிடம் 'சில்மிஷம்' பேருந்து பயணி கைது

மாணவியிடம் 'சில்மிஷம்' பேருந்து பயணி கைது

மாணவியிடம் 'சில்மிஷம்' பேருந்து பயணி கைது


ADDED : பிப் 12, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாம்பலம்மந்தைவெளியில் நேற்று மதியம் புறப்பட்ட தடம் எண்: '12எம்' மாநகர பேருந்து, கே.கே.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் பயணியருடன், கல்லுாரி மாணவியரும் பயணித்தனர்.

பேருந்து, தி.நகர் துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவியின் பின்னால் நின்றிருந்த நபர், அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.

இதையடுத்து அம்மாணவியுடன் சக பயணியரும் சேர்ந்து, அந்த வாலிபரை பிடித்து, மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர், அசோக் நகர் நான்காவது அவென்யுவைச் சேர்ந்த ரமேஷ், 49, என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us