/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு
/
பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு
ADDED : ஆக 18, 2025 03:16 AM

புதுவண்ணாரப்பேட்டை:திருவான்மியூரில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை அடுத்த சுங்கச்சாவடி பணிமனைக்கு, தடம் எண்: 6டி என்ற மாநகர பேருந்து, நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், தன் மொபைல் போன், கைப்பையை தவற விட்டு, காசிமேடில் இறங்கி விட்டார்.
பேருந்து சுங்கச்சாவடி பணிமனைக்கு சென்றதும், இருக்கையில் கேட்பாரற்று கிடந்த மொபைல் போன் மற்றும் கைப்பையை, ஓட்டுநர் எபினேசர், நடத்துநர் விக்னேஷ் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர்.
வீட்டுக்கு சென்ற அப்பெண், கைப்பை மற்றும் மொபைல் போனை தவற விட்டது தெரிய வர, சுங்கச்சாவடி பணிமனைக்கு வந்து, தான் தவற விட்ட பொருட்கள் குறித்து அடையாளம் தெரிவித்தார்.
மொபைல் போன் மற்றும் கைப்பை அப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.