/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடத்துநரை தாக்கிய மாணவி பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
நடத்துநரை தாக்கிய மாணவி பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்துநரை தாக்கிய மாணவி பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்துநரை தாக்கிய மாணவி பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2025 03:20 AM

கிளாம்பாக்கம்: சென்னை பிராட்வேயிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு, நேற்று முன்தினம் மாலை அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பயணித்த சட்டக்கல்லுாரி மாணவி பிரியா என்பவர், தாம்பரம் வரை பயணிக்க டிக்கெட் வாங்கி உள்ளார்.
ஆனால் அவர் தாம்பரத்தில் இறங்க மறுத்ததால், இரும்புலியூர் நிறுத்தம் வந்தபோது, பேருந்து நடத்துநர் மணி, 15 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டுமென, அவரிடம் கூறியுள்ளார்.
இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரியா, நடத்துநர் மணியின் கன்னத்தில் இருமுறை அறைந்துள்ளார்.
இதுகுறித்து நடத்துநர் மணி, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மாணவி பிரியாவும் அதே காவல் நிலையத்தில் மணி மீது புகார் அளித்தார்.
இந்நிலையில், நடத்துநர் மணி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், கிளாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதை, பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரவிய நிலையில், கிளாம்பாக்கம் போலீசார் மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர்.

