/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ'வுக்காக பஸ் நிறுத்தம் அகற்றம் வில்லிவாக்கம் பயணியர் கடும் அவதி
/
'மெட்ரோ'வுக்காக பஸ் நிறுத்தம் அகற்றம் வில்லிவாக்கம் பயணியர் கடும் அவதி
'மெட்ரோ'வுக்காக பஸ் நிறுத்தம் அகற்றம் வில்லிவாக்கம் பயணியர் கடும் அவதி
'மெட்ரோ'வுக்காக பஸ் நிறுத்தம் அகற்றம் வில்லிவாக்கம் பயணியர் கடும் அவதி
ADDED : செப் 08, 2025 06:24 AM
வில்லிவாக்கம்: மெட்ரோ ரயில் பணிக்காக நாதமுனி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டதால், வில்லிவாக்கம் பயணியர் கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலை, மெட்ரோ ரயில் இரண்டாம் திட்ட பணிகளுக்காக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிக்காக, அப்பகுதியின் முக்கிய பேருந்து நிறுத்தமான நாதமுனி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது.
இதனால், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
நியு ஆவடி சாலை மற்றும் எம்.டி.எம்., சாலை சந்திப்பில் உள்ள நாதமுனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், நாதமுனி பேருந்து நிறுத்தம் அற்றப்பட்டது. அதற்கு பதில் 1 கி.மீ., தள்ளி சிட்கோ நகர் நிறுத்தத்தை பயன் படுத்த வேண்டியுள்ளது.
இதனால் நியு ஆவடி சாலையில் வரும், தடம் எண் '71இ, 71' ஆகிய பேருந்துகளில் பயணிப்போர், காந்தி நகர் அல்லது சிட்கோ நகர் நிறுத்தங்களில் இறங்க வேண்டியதாகிறது. இடையே, 3 கி.மீ., துாரம் உள்ளது.
அதேபோல், எம்.டி.எச்., சாலையில் வரும், தடம் எண்கள் '63, 35, 48 சி, 120, 48கே, 48 சி' ஆகிய பேருந்துகளில் வருவோர், கல்பனா நிறுத்தம் அல்லது சிட்கோ நகரில் இறங்க வேண்டும். இங்கிருந்தும், 1 - 2 கி.மீ., செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், நாதமுனி நிறுத்தத்தை பயன்படுத்தும் பயணியர், காலையும், மாலையும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சம்பந்தப்பட் ட துறையினர், நாதமுனி சிக்னல்கள் உள்ள வளைவு அருகில் பேருந்துகளை நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.