/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்தது பஸ் சக்கரம் 30 பயணியர் தப்பினர்
/
உடைந்தது பஸ் சக்கரம் 30 பயணியர் தப்பினர்
ADDED : அக் 22, 2024 12:23 AM

திருத்தணி, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண்: 'டி.43' என்ற அரசு நகர பேருந்து, மேல்திருத்தணி, சூர்யநகரம், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி வழியாக சொராக்காய்பேட்டை வரை இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, சொராக்காய்பேட்டையில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் திருத்தணி சென்றது.
இரவு 9:45 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி.யில் இருந்து அரக்கோணம் சாலைக்கு பேருந்து திரும்பும்போது, பேருந்தின் முன்சக்கரம் திடீரென உடைந்தது.
இதனால் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணியர் அலறி அடித்து இறங்கினர். அதிர்ஷ்டவசமாக, 30 பயணியர் உயிர் தப்பினர்.
அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட்டனர்.
தொடர்ந்து, அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் வந்து, சக்கரத்தை மாற்றி, பேருந்தை ஓட்டிச் சென்றனர்.