ADDED : அக் 14, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, 43; சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்.
பெரம்பூர் பணிமனையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு தடம் எண் '29சி' மாநகர பேருந்தை பெசன்ட் நகருக்கு ஓட்டிச் சென்றார்.
பிரிக்களின் சாலை இரண்டாவது தெரு வழியாக செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர், கல்லை வீசி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். கண்ணாடி முழுதும் உடைந்து சிதறியது.
ஓட்டுநர் மருதுபாண்டி புகாரையடுத்து, வழக்கு பதிந்த போலீசார், பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.