/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3,000 லஞ்சம் பெற்ற வணிக உதவியாளர் கைது
/
ரூ.3,000 லஞ்சம் பெற்ற வணிக உதவியாளர் கைது
ADDED : பிப் 07, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, கோவில்பதாகை, பழைய அக்ரகார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 62. இவர், வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை, வீட்டு மின் இணைப்பாக மாற்ற, சில நாட்களுக்கு முன் ஆவடி கோவில் பதாகை மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அதை பரிசீலித்த மின் வணிக உதவியாளர் மரியதாஸ், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுலோச்சனா, இது குறித்து திருவள்ளூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் நேற்று புகார் அளித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மரியதாஸ் லஞ்சம் பெறும் போது சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.

