/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.55 லட்சம், பைக் வழிப்பறி
/
போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.55 லட்சம், பைக் வழிப்பறி
போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.55 லட்சம், பைக் வழிப்பறி
போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.55 லட்சம், பைக் வழிப்பறி
ADDED : அக் 06, 2025 03:04 AM
பூக்கடை: போலீஸ் எனக்கூறி, வியாபாரியிடம் 55 லட்சம் ரூபாய் மற்றும் பைக் வழிப்பறி செய்த நான்கு பேர் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
சவுகார்பேட்டை, வரதமுத்தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ், 38. இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் இருந்து, முஜீப் என்ற ஏஜன்ட் மூலம் 'லேப்டாப்' வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். அண்ணா சாலையில், லேப்டாப் விற்பனை செய்யும் கடையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில், முஜீப்பின் ஏஜன்டிடம் கொடுப்பதற்காக 55 லட்சம் ரூபாயுடன், வடக்கு கடற்கரை சாலை தபால் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு நரேஷ் நின்றிருந்தார்.
நீண்ட நேரமாகியும் ஏஜன்ட் வராததால், பணத்துடன் கோட்டை ரயில் நிலையம், முத்துசாமி பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில், நரேஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் பின்தொடர்ந்த இருவர், தாங்கள் போலீஸ் என்றும், உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர்.
சிறிது துாரத்தில் இருவரும் பைக்கை நிறுத்தியுள்ளனர். பின், அங்கு நின்றிருந்த இருவருடன் நரேஷிடம் இருந்த 55 லட்சம் ரூபாய் மற்றும் பைக்கை பறித்து தப்பியுள்ளனர்.
இது குறித்து புகாரை அடுத்து, பூக்கடை போலீசார் நேற்று வழக்கு பதிந்து, நான்கு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.