நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்: குரோம்பேட்டை, நாகல்கேணி, அண்ணாசாலையை சேர்ந்தவர் ரகுமான், 45; தோல் வியாபாரி. இவர் பெண் ஒருவருடன், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியதாக கூறப்படுகிறது. அறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
பதறிய பெண், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தப்பினார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

