/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையிலும் ஆக்கிரமிப்பு அகற்ற மும்முரம்
/
மழையிலும் ஆக்கிரமிப்பு அகற்ற மும்முரம்
ADDED : அக் 16, 2024 12:08 AM
மதுரவாயல், மதுரவாயல் ராஜிவ்காந்தி தெருவில், 46 வீடுகளும்; நெற்குன்றம் என்.டி.பட்டேல் சாலையில், 29 வீடுகளும், மாநகராட்சியின் வண்டிப் பாட்டை நிலத்தில் அமைந்துள்ளன. இங்கு, மக்கள் 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள குடியிருப்பிற்கு செல்ல இருந்த 40 அடி சாலை, ஆக்கிரமிப்பில் சிக்கி, 20 அடி சாலையாக சுருங்கி உள்ளதாக, அப்பாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, இம்மாதம் 3ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன், மதுரவாயல் தாசில்தார் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, அளவீடு செய்தனர். அதன்படி, நேற்று கொட்டும் மழையில், ராஜிவ்காந்தி நகருக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
அப்போது, பகுதிவாசிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள தங்களுக்கு அவகாசம் வேண்டும்' என, வாக்குவாதம் செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறி, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.