/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கல் ஓடையை சுத்தம் செய்ய தடையாக இருந்த கேபிள் அகற்றம்
/
வீராங்கல் ஓடையை சுத்தம் செய்ய தடையாக இருந்த கேபிள் அகற்றம்
வீராங்கல் ஓடையை சுத்தம் செய்ய தடையாக இருந்த கேபிள் அகற்றம்
வீராங்கல் ஓடையை சுத்தம் செய்ய தடையாக இருந்த கேபிள் அகற்றம்
ADDED : மே 17, 2025 12:31 AM
புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி - ஆலந்துார் உள்வட்ட சாலையில், புழுதிவாக்கம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் இருபுறமும், வீராங்கல் ஓடை செல்கிறது.
இக்கால்வாயின் குறுக்கே, மிக குறைந்த உயரத்தில் இரும்பு கர்டர்கள் அமைத்து, அதில் உயரழுத்த மின்சார கேபிள்கள் செல்கின்றன.
இதனால், துார்வாரும் வாகனங்கள் செல்ல முடியாமல், பருவ மழைக்காலங்களில் கழிவை அகற்றி, கால்வாயை சுத்தம் செய்ய முடியாத நிலை இருந்தது.
அதனால், நீரோட்டம் சீராக இல்லாமல், ஊருக்குள் கழிவுநீர் புகுந்து அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், மின் வாரிய மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தார். அந்த மனுவில், கால்வாயின் குறுக்கே செல்லும் மின் கேபிள்களை அகற்றி, மாற்று பாதையில் அமைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி, மக்கள் குறைதீர் மன்ற தலைவர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர், கால்வாயை துார்வார தடையாக இருக்கும் மின்சார கேபிள்களை அகற்றி, வேறு பாதையில் அமைக்க உத்தரவிட்டனர்.
அதன் நடவடிக்கையாக, தற்போது வாணுவம்பேட்டை மின் அலுவலக உதவி பொறியாளர் மற்றும் பணியாளர்கள், 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் கேபிள்களை மாற்றி அமைத்துள்ளனர்.
இதனால், வீராங்கல் ஓடையை சுத்தம் செய்வதில் இருந்த தடை நீங்கியுள்ளதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.